அறியப்படாத சுவை

அம்மாவிற்கு நன்றாக சமைக்கத் தெரியும்
பரிமாறவும் தெரியும்
அம்மாவிற்கு அன்புகாட்டத் தெரியும்
அவளுக்கு தெரியாததெல்லாம் வெறுப்பு
அவள் சமைத்துப் போட்டுக் கொண்டேயிருப்பாள்
அவள் விரல்களில் எதைத்தான் வைத்திருப்பாள்
எவருக்கும் தெரியாது
.
ரசம் வைப்பாள் வித விதமாய்
சாம்பார் வாசனையால் தெரு மணக்கும்
உணவு வகைகளை சலிக்காமல் செய்வாள்
உப்புப் போட அவள் மறந்ததேயில்லை
ஒருவேளை
அது சற்று கூடியிருந்தாலும் ருசியாகத்தானிருக்கும்
இந்த அம்மாவுக்குத் தெரியாததெல்லாம் ஒன்றுதான்
.
அம்மாவின் சமையல் சுவையாய்
அவனைப் பிடித்திருந்தது
அவனைப் பிடிக்கும் என்பது நான் அறியாத சுவை
என்பது அம்மா அறியாதது
.
அவள் அறிந்ததும் நான் அறியாததுதான்.
…………………………………………………………………………………………..சக்தி ஜோதி 
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to அறியப்படாத சுவை

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    அம்மாவிற்கு பின் அவன்..கொடுத்து வைத்தவன், தாயுமானவன் …அம்மா+அன்பு+சமையல் +அவன்= அற்புத ஆனந்த வாழ்க்கை..poem….நறுமண அன்பு மையல் கூட்டிய சமையல்…

  2. Chandrasekaran சொல்கிறார்:

    அம்மாவின் ஒரே புடவையும் பெரிதாய் கிழிந்து இருந்தது
    எனக்கு தெரியவில்லை..ஆனால், என்னவள்
    அவளின் கலர் துப்பட்டாவில் ஒரு நூல் தொங்கியது எனக்கு
    கோபம் வந்தது.. என் சுவை தெரிந்த என் அம்மா சுமை எனக்கு புரியவில்லை
    நான் சுவைக்கப் போகும் அவளின் இமை துடிப்பு புரிகிறது..
    காதலா .. அல்லது கடமையா .. காதலிப்பதும் கடமைதான் ..
    என அம்மா.. உன் கருப்பை மூலம் என் இரப்பையை நிரப்பியவளே..
    உன் உழைப்பின் மூலம் நுண் அறிவை மூளைக்கு பரப்பியவளே..
    இவள் இருக்கிறாள் என் காதலி ..
    என் அறிவை இருட்டடிப்பு செய்தவள்..இருப்பினும் அவளே வேண்டும்
    என் அம்மா நீ இல்லா நேரத்தில் எனை உன் போல் பார்ப்பாள் ..
    அவளை ஏற்றுக்கொள் …இல்லையானால் வீட்டை மாற்றிக்கொள் ..

  3. N.Rathna Vel சொல்கிறார்:

    அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s