கடந்து செல்லும் காலம்

இந்தப்  பயணம்தான்
எத்தனை  எளிதாய்  துவங்கிவிட்டது
 .
மலைகள்
குன்றுகள்
நதிகள்
உருப்பெற்று நிலைபெறும்  முன்
நிலவெளியில்
காற்றெனத் துவங்கியது
 .
அவளால்
அவனது  பொழுதுகள்   முழுமையடைந்திருந்தன
 .
வெம்மை
குளிர்மை  என
அவளை  உணர்ந்திருந்தான்
அப்பொழுதெல்லாம்
ஒருபோதும்  முடிந்துவிடாத  பயணத்தை
யாவருடனும்
துவங்கிவிட  இயலாது  என்பதை
அவன்  அறிந்திருக்க  வில்லை
 .
காற்றைப்  பற்றி  நடந்த  அவன்
கடந்து  கொண்டிருக்கிறான்
காலத்தையும்
காதலையும் .
 .
………………………………………………………………………………………………சக்தி ஜோதி 
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to கடந்து செல்லும் காலம்

 1. Anbushivan சொல்கிறார்:

  யாருமேயில்லாத
  வாழ்வே நிரந்தரம்
  தனித்து வந்தது
  போல் தனித்தே பயணம்
  துணைவருவதென்பதெல்லாம்
  ஒரு மயக்கம்.

  அருமையான வார்த்தை விளையாட்டு.

 2. Dhana Sekar சொல்கிறார்:

  ஆதியில் காற்று என துவங்கி பலவாகியும் நிற்கிற பருப்பொருளை மெலிதாக நினைவூடியபடியே பயணிக்கிற கவிதை ,வெம்மை ,குளிர்மை என அவளை உணர்ந்திருக்கிறான் என்கிற இடத்தில் காலம் கடந்த நிலையில் நம்மை மிதக்க வைத்து ,காற்றை பற்றி நடந்த அவன் ,காலத்தையும் ,காதலையும் கடந்து கொண்டிருப்பதாக கவித்து நம்மையும் அவனோடு அழைத்து செல்கிற பாங்கு சொல்கிற விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது .

 3. mohanamoorthy சொல்கிறார்:

  manadai varudum iniya varthaigalil sirantha padaipu

 4. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  காதல் , காற்றாய், பிரபஞ்சம் தோன்றிய போதே , அழகாய் மலர்ந்து விட்டது..பின், எத்தனை வடிவங்களில் புவி காட்சி அளித்தாலும், காதல் மட்டும் , தொடர்ந்து அவன் ,காதலை , காற்றாய் பிடித்து , பிரபஞ்சத்தை ….தொடர்கின்றது,…காலமும் காதலும்..

 5. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

  “..காற்றைப் பற்றி நடந்த அவன்
  கடந்து கொண்டிருக்கிறான்
  காலத்தையும்
  காதலையும் …”
  அருமை!
  ஆனால் அவன்
  கனவுகளிலும் நினைவுகளிலும்
  முழுமையடைந்த
  வாழ்வின் எச்சங்கள்
  பரந்து பிரபஞ்சம் அணைக்கும்.
  வேப்பம் பிசினாய் ஒட்டி நிற்கும்..

 6. N.Rathna Vel சொல்கிறார்:

  அருமை.
  வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s