காற்றில் மிதக்கும் துயரம்

என்ன  செய்வது
கரங்களில்   மயங்கிச்   சரிந்த  மனதினை
 .
என்ன  செய்வது
மனதில்  மயங்கிச்  சரிந்த  உடலினை
 .
என்ன செய்வது
துயரத்தில்  தோய்ந்த  காதலை
 .
ஒரு  புன்னகை
அதற்கு ஈடான  ஒரு சொல்
அல்லது
அருகாமை  உணரவைக்கும்
ஏதேனும்  ஒன்று
 .
அன்பைப்  பெற காத்திருக்கையில்
மௌனத்தின்  ஊடே
கடந்து செல்கின்ற  காற்றில்
மிதந்து  கொண்டிருக்கிற     காதல்
துயரமாக
கண்களில்  வழிகிறது .
…………………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to காற்றில் மிதக்கும் துயரம்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    அன்பிற்கும் உண்டோ .. அன்பு என்றும் …மகிழ்வாய் வாழ…அன்பான கவிதை , வாசகனை தென்றலாய் தாலாட்டி, வருடி…

  2. N.Rathna Vel சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

  3. Chandrasekaran சொல்கிறார்:

    துயரத்தில் வழிந்த என் கண்ணீரை துடைக்குமே,
    தூக்கத்தில் வழிந்த என் சிரிப்பை அடைக்குமே
    தூரத்தில் நெளிந்து தெரியும் உன் நிழல்…
    செம் பவளத்தில் முத்து போல் பல் வரிசை காட்டி
    மனதில் மயங்கி சரிந்த என் உடலை தாங்குமே
    மெல்லியதாய் கேட்கும் உன் குரல்….
    தோய்ந்த காதல் என எண்ணி எண்ணி நான்
    கண்ணிரண்டை காய விட்டேன் ..என்னவளே
    பத்து மணி நேரம் உன் கால் கொலுசை காணமல் போனால்
    பன்னிரெண்டாண்டுகள் வனவாசம் பெரிதல்லடி …
    புன்னகைக்கு புது புது அர்த்தம் உன்னிடம் தான் கற்றேன்.
    போதுமடி இந்த காதல் சோதனை….இது அகிம்சை வழி அல்ல..
    எனக்கு நாள்தோறும் நீ தரும் இந்த அடிமனது வலி …….

  4. jeevan சொல்கிறார்:

    காதல் துயரம் தான். அன்பு துயரம் தான்.
    ஆனாலும் நான் மனிதனாயிற்றே – அன்பு செய்து
    தோற்றுபோகிறேன்.

    மௌனத்தின் ஊடே
    கடந்து செல்கின்ற காற்றில்
    மிதந்து கொண்டிருக்கிற காதல்

    காதல் பயணிப்பதை நீங்கள் சொல்லியிருக்கும்
    அழகு, மனதை தென்றலாய் வருடியது.
    ஆயினும் தென்றல் இதயத்தை முட்களாய்
    கிழிக்கும என்ன?
    உங்கள் வரிகளும் அப்படித்தான் , கவிதை
    படித்து முடித்து வெகு நேரம்
    மனதில் கசியும் ரத்தத்தை
    துடைக்க மனதில்லை.

    • Chandrasekaran சொல்கிறார்:

      உப்பு தண்ணீரில் உயிர் வாழும் மீனுக்கு
      சர்க்கரை நோய் போல் கண்ணீருடன்
      சோகத்திலேய வாழும் எனக்கு உன்மீது
      இனிப்பான காதல் நோய் ….
      மீன் செத்தாலும் உப்பும் காரமும் ஒட்டியே வரும்:

      தென்றலை நான் தீண்டியது இல்லை
      தென் இலங்கை அரசின் சீறும் துப்பாக்கி ரவைகளை
      தாங்கியுள்ளேன்.. உன்னை எண்ணி எண்ணி
      துடுப்பு போடுகிறேன் .. என்னவளே..என் வீட்டில்
      அடுப்பு, இரண்டு நாளாய் தூங்கி விட்டது ..
      வலை பின்னும் வளையல் கொடி வாலை மீனே ..
      வந்தால் ..நான் மீண்டு வந்தால், உன் முத்து சிரிப்புக்கு
      தென் பாண்டி முத்துக்கள் பரிசாய் தருவேன்..
      இல்லையானால், சேதுவிலிருந்து சேதி வரும், அல்லது
      தினத்தந்தி தலைப்பில் என் படம் வரும் ..

      நான் மறுபடி ஜனித்தால், தப்பாமல்
      நான் உப்பாவேன் ..நீ காற்றாவாய் ..
      உப்பு காற்றாய் கடற்கரையில் உலா வரலாம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s