(முல்லைபெரியாறு) கட்டிலின் கதை

எங்கள் வீட்டு கட்டிலைப் பற்றி
ஒரு கதை இருக்கிறது
.
ஞாபகங்களிலிருக்கும் அச்சம்
இன்னமும் நீங்கிவிடவில்லை
கட்டில் உறக்கம் இரவில் விழிக்கச் செய்கிறது
.
இந்தக் கட்டில் உருவாகிய நாட்கள்
அணைக்கட்ட சென்றிருந்த
அப்பா
தோதகத்தி மரத் தடிகளை
பூமியில் புதைத்து வைத்திருந்தார்
.
பெரும் மழைக்கு பின்பான ஒரு நாளில்
மரத்தை எடுக்கச் சென்றபோது
மண்பிளந்து நின்றது
இறந்தவரின் கால்களென
.
அது
கட்டிலின் நான்கு கால்களாய்
காட்சி தரும் இரவுகளில்
அப்பாவைப் போல
நாங்களும் கண்ணீர் வடிப்போம்
அணைக்கட்டு நீரோடு அதன் பேரிரைச்சலோடு
.
மழை
காற்று
வெயில் யாவும்
அணைகட்டுப் பணியாளர்களைக் கடந்துகொண்டிருந்தன.
……………………………………………………………………………………………………………..சக்திஜோதி
(முல்லைப் பெரியாறு அணைக்கட்டில் பணியாற்றிய ஒருவரின் மகளாகிய கவிஞர் சக்திஜோதியின் நிஜ நினைவுகள்)
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to (முல்லைபெரியாறு) கட்டிலின் கதை

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    மக்களுக்கான கலை என்பதை புரிந்தவர்கள் வெகு சிலர்..அதிலும் , அதனை , வியாபாரமக்காமல், மக்களிடம் ,கொண்டு சேர்க்க வேண்டும் என்பவர்கள் அதிலும் சிலர் மட்டுமே ..அதனை, உரிய நேரத்தில்,அதாவது , தாங்கள், யார் என்று அறியாது, பிரச்சினைகளில் உழலும்பொழுது , அவர்களிடம் , வரலாற்றை கொண்டு சேர்ப்பது என்பது குறிஞ்சி மலர் பூப்பது போல்…அதிலும், கவிஞர் , தன் சொந்த , சோக சம்பவத்தை ,நம்மிடம், ‘ ‘மண்பிளந்து நின்றது இறந்தவரின் கால்களென’ என்ற வார்த்தைகளின் மூலம் , பகிரும்போது, நம் இதயம் ,கனக்கத்தான் செய்கின்றது. நம் கவிங்கரோ, எப்பொழுதும் , தன்னை விட , உயிராக நினைப்பது, ‘இயற்க்கை’ ஒன்றை மட்டுமே ! ‘ அப்பாவைப் போல நாங்களும் கண்ணீர் வடிப்போம் ‘..என்ற வார்த்தைகள், நாம், தொடர்ந்து வாழும் சோக சுழலை ,மிகவும் , தொடர்ந்து வாழும் சோக சுழலை ,மிகவும் , ஆழமாக மனதில் பதிய செய்கின்றார்..poem வாழ்ந்து கொன்றிருக்கும் தொடர் கவலை …

  2. மழை சொல்கிறார்:

    இது கதையா?கவிதையா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s