குளத்து நீர்

குளத்தின் நீர்ப்பரப்பு
ஆம்பல்  இலைகளினால்
போர்த்தப்பட்டிருக்கிறது

.

நிலத்தைத்  தொடமுயன்று
தோற்றுத் திரும்பும்
சூரியனின்  ஒளிக்கற்றைகளில்
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது

.

இலைகள்
அங்கொன்றும்   இங்கொன்றுமென
காற்றில்  புரளும்
ஆம்பலின்  இலைகளில்
செம்மை படர்ந்திருந்தன

.

நெடுதூரம்  கடந்து வந்த களைப்பிலும்
தாகத்திலும்
பாசி படர்ந்திருந்த நீர்ப்பரப்பில்
தாகம்  தணித்துக்கொண்ட

.

நீர்ப்  பறவைகளின்  பாதம்பட்டு   கலைந்த  பாசி
மீண்டும்  மூடிக்கொண்டது

.

குளத்தின்  ஆழம்
ஒருபோதும்
தீர்ந்துவிடாத தாகத்தைத் தருகின்றது .
…………………………………………………………………………………………………………..சக்தி ஜோதி 
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , . Bookmark the permalink.

One Response to குளத்து நீர்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    மனம் என்னும் நீர்ப்பரப்பு , இலைகளாலும் , கிரணங்களாலும் என்னதான் தொடர்பு கொண்டிருந்தாலும், அவ்வப்போது, பறவை என்னும் இறக்கையான சலனங்கள் ஏற்பட்டாலும் , மனதின் ஆழம் என்றும் மீண்டும் மீண்டும் அறிய தூண்டும்… ஆனால், முடியாது.. poem , கடலின் அமைதி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s