உன்னுடன் வரும் எனது பொழுது

நம்மை
மழை நனைத்த  பொழுது
இன்னும்
நீர்த்திவலைகளாக
மனதில்  படிந்திருக்கிறது
.
புத்தக  அடுக்குகளிலிருந்து
தலை  நீட்டித்   தெரியும்
நான்காய்  மடிந்த காகிதம்
முழுமையாய்  சொல்கிறது
உனது  துயரங்களை
.
விம்மியடங்கும் ஓசைகள்
மெலிதாய்  எழுகின்றன
 .
கடிதம்
புத்தகத்தினுள்  வைக்கப்பட்டவுடன்
மழை  தொடங்கிவிட்டது
.
இங்கு
வேறு  யாருமில்லை
புத்தகத்தைப்  பெற்றுக்கொண்ட
எனது  விரல்களில்
மழைத்துளி பட்டுத்  தெறிக்கிறது
மழை நனைத்துக் கொண்டிருக்கிறது
மரங்களை
செடிகளை
பூக்களை
பறவைகளை
கூடவே
உன்னையும்
உன்னுடன்  வரும் எனது அன்பையும்
.
நீ
கொண்டு செல்கிறாய்
நம்மை நனைத்த மழையையும்
அந்த பொழுதையும் .
………………………………………………………………………………………………..சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to உன்னுடன் வரும் எனது பொழுது

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    அன்பு புத்தகம் விரல்களில் பட்டதும் , கடித ஸ்பசரிசம், மழை திவலைகளாக , நம் மனதில்…மரங்களை,செடிகளை,பூக்களை அத்துடன் வாசகனையும்
    ஆட்கொளும் அற்புத கவிதை.அன்பு என்றும் இயற்கையானது என்பதை அற்புதமாக பதிவு செய்துள்ளார் கவிஞர் .poem, அடடா ,மழைடா, அன்பு மழைடா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s