பனிப்பொழுதைக் கடந்து

நெடுச்சாலையில்
பனிமூடி  நிற்கின்ற  வாகனங்களைப்  பார்க்கின்றேன்
நினைவுகள்   உறைந்து  என்னுள்  கிடப்பதுபோல
ஒவ்வொரு  வாகனமும்   வரிசை  தவறி  நிற்கிறது
 .
பனிபொழியும்  அந்த மாலையில்
விளக்கொளியில்
நின்றிருக்கிறாய்
 .
உன்னைக் கடக்கவேண்டுமென்ற  தயக்கத்தில்
பனித்துண்டுகளைத்   தட்டிவிட்டபடி
நின்றிருந்தேன்
 .
இடைவெளியில்
காற்றும்   பனியும்  நிரம்பியிருக்கிறது
 .
மஞ்சள்  நிறவெளிச்சத்தில்
உன்  பார்வையை  அறியமுடியவில்லை
அல்லது
என்னைத்  தவிர்க்கிறாயா
என்பதும்  தெரியவில்லை
 .
பனித்திரை  மறைந்துவிடும்
தூயகாலையில்
உனது  வாகனத்தில்  அமர்ந்து
என்னைக் கடந்து  சென்றிருப்பாய்
 .
நெடுஞ்சாலை  வழியே  விரைந்து  செல்கையில்
இன்னமும்   உருகாத பனிக்கட்டிகள்
நம்மை  நினைவூட்டலாம் .
……………………………………………………………………………………………………….சக்தி ஜோதி 
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to பனிப்பொழுதைக் கடந்து

 1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  – வாகனம் மூலம் நினைவுகள் ..மஞ்சள் நிறவெளிச்சத்தில், மங்கள அடையாளம் –..பனித்துண்டுத் தயக்கம் ,நினைவுகள் குளிராகவும்–காற்றும் பனியும் –தயக்கத்திற்கு காரணங்கள் எனவும் ஒரு பனிகால நினைவுகள் கம்பளி போர்த்த நினைக்கின்றது ..poem, நெடுஞ்சாலை என்னும் வாழ்க்கை

 2. rathnavel சொல்கிறார்:

  அருமை அம்மா.
  வாழ்த்துகள்.

 3. சின்னப்பயல் சொல்கிறார்:

  இடைவெளியில்
  காற்றும் பனியும் நிரம்பியிருக்கிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s