விதை

கையிலிருக்கும்
சில விதைகளைத் தருகிறேன்
உங்களுடைய நிலத்தின் இடுவதற்காக

 

இன்று மேலும் இரண்டு மரங்களுக்கு

 

நீர் ஊற்றியிருக்கிறேன்

 

யாரோ  விதைத்து
வளர்ந்த  மரத்தில்
வயதானவர்கள்  ஓய்வெடுத்துச்  செல்கின்றனர்

 

காய்த்துக் குலுங்கும் மரத்தினடியில்
சிறுவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கின்றனர்

 

என்னிடம் மேலும் சில விதைகள்  இருக்கின்றன
 என்னிடம் மேலும் சில பறவைகள்  இருக்கின்றன
என்னிடம் மேலும் சில ௬டுகள்  இருக்கின்றன
முதலில் யார்
இந்த விதையை விதைத்தார்கள் என்று அறிகின்ற
பின்னொரு  நாளில்
என்னுடைய  கைகளிலிருந்த  விதைகளை
வாங்கியவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்

 

அப்பொழுது
உங்களுடைய  நிலத்தில் விதைத்துக்கொண்டிருப்பீர்கள்
 ……………………………………………………………………………………………சக்தி ஜோதி 
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to விதை

  1. rathnavel சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

  2. ravi (swiss) சொல்கிறார்:

    அற்புதமான கவிதை.
    //என்னிடம் மேலும் சில விதைகள் இருக்கின்றன
    என்னிடம் மேலும் சில பறவைகள் இருக்கின்றன// அற்புதமான வரிகள் இவை. “என்னிடம் சில கூடுகள் இருக்கின்றன” என்கிறீர்கள் சக்தி. பறவைகளுக்கான கூடுகளைத்தான் அவை சொல்கின்றன என நினைக்கிறேன். கூடுகள் என்றாலே சிறைப்படுத்தலின் குறியீடு என்பதே என் புரிதல். பறவைகள் தாங்களாகவே தமக்கான வீடுகளை (கூடுகளை) அமைத்துக்கொள்ளட்டுமே. நாம் வழங்கவேண்டியதில்லையே.

  3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள் ஆள் போல் தளைத்து
    ,இயற்கையுடன் இணைந்து ,
    சமுக விருச்சமாய் உருவெடுத்தது ..
    கவிதைகளும் , சில நேரங்களில் , சில சுயமான விருச்சங்களால்…

  4. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள் ஆல் போல் தளைத்து ,
    இயற்கையுடன் இணைந்து , சமுக விருச்சமாய் உருவெடுத்தது ..
    கவிதைகளும் , சில நேரங்களில் , சில சுயமான விருச்சங்களால்…
    கூடுகளுக்கு இடம் கொடுக்கும் விருச்சம் ,
    ஒரு நாள் , கூட்டு பறவைக்கும் பறக்க கற்று கொடுக்கும்..
    கூடும் இடம் மறைய …மெல்ல சூரிய கிரணங்கள் ..

  5. hemgan சொல்கிறார்:

    அருமை. நன்றாக இருக்கிறது. பாராட்டுகள். விதைகளை பாடுபொருளாக வைத்து நான் எழுதிய கவிதையை படியுங்கள். http://wp.me/pP1C7-7W

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s