வானத்திலிருந்து உதிரும் நட்சத்திரங்கள்

 

வானத்திலிருந்து
உதிர்ந்து கொண்டேயிருந்தாய்
நட்சத்திரங்களென

 .

ஒவ்வொன்றாய்
சேகரித்து  சேகரித்து
கோத்துக் கொண்டேயிருந்தேன்

 .

அது
காதலாக மலர்ந்தது

 .

உனது  கண்கள்
உனது  உடல்
உனது  தோற்றம்
எதையும்  அறியாது
மாலையாக  உருமாறிக்கொண்டிருந்தது

  .

மௌனம்போல்
வானில்
ஒளிரும்  நட்சத்திரங்கள்
மாலையின்  மணிகளாக
சேகரமாகிக் கொண்டிருந்தன
ஒவ்வொரு இரவிலும்

 .

உதிரும்
எரிநட்சத்திரங்கள்
காதலைச் சொல்கின்றன
அவரவர் காதலை  நினைவூட்டியபடி.

 .

…………………………………………………………………………………………சக்தி ஜோதி 
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

One Response to வானத்திலிருந்து உதிரும் நட்சத்திரங்கள்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    மலர்கள் , வண்ண மாலையாக மாறும்..ஆனால், இங்கு அன்பு மனதின் கண்கள் , உடல், தோற்றம் மலர்களாக மாறி அன்பு மாலையாக மாறும் அற்புதம்..
    ஒளிரும் நட்சத்திரங்கள் மணிகளாக …கவிதை, அன்பாலான ,அற்புத அழகு மாலை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s