வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள்

  .

வண்ணத்துப் பூச்சிகள்தான்
இந்த பூமிக்கு நிறங்களைத் தருவதாக
நம்பிக்  கொண்டிருக்கிறாள்  ஒரு  சிறுமி

.

இறந்த
வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளைப்  பார்த்தாள்
பின்பு
வண்ணத்துப் பூச்சிகளற்ற
வீட்டுத்  தோட்டத்தைக் கற்பனைசெய்யத்  துவங்கினாள்

 .

தனது
சிறிய இறகுகளில்
வண்ணங்களாய்
இன்பத்தைச்  சுமந்து  திரியும்  அவைகளை
ஒரு நாளும்
சந்திக்காமல்  இருந்ததில்லை  அவள்

 .

இதுவரையில்
எத்தனை  எத்தனை வண்ணத்துப் பூச்சிகள்
மரணமடைந்திருக்கும்
அந்த மரணம்
எப்படி துயரப்படுத்தியிருக்கும்

 .

அவள்
தன்னுடலில்
மரித்துப்  போன வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகளை பத்திரப்படுத்தினாள்.

 .

………………………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    பெண்கள் , வண்ணத்துப் பூச்சிகள் என உரு மாறியதாக கவிதை உள்ளது..அவர்களின் , எண்ணங்கள் உரு எடுக்காது,உதிந்து விட்ட பொழுது, ஏற்பட்ட ரணம் , அதன் வலி ..பின், மரித்து போன தன் உணர்வுகளை மனதுக்குள் பத்திரபடுதிகொண்ட விதம் , தோட்டம் ,வண்ணத்துப் பூச்சிகள் என ரணம் கூட அழகாய் ….கவிதை, வண்ண வலிகள்…

  2. ravi (swiss) சொல்கிறார்:

    ஆம் சக்தி வண்ணத்துப்பூச்சிகள் உலகை நிறங்களாய் சிருஷ்டிக்கும் ஆற்றலை எமக்கு வழங்கிவிடுகிறது. கவிதைகளும் அப்படித்தான். எம்மை ஆகர்சிப்பவர்களை அல்லது நேசத்துக்குரியவர்களை சிலவேளைகளில் எனது சொற்கள் காயப்படுத்திவிடும்போது அந்தத் தவறு நிறங்களை உதிர்த்த வண்ணத்துப்பூச்சிகளை காண்பிக்கும் வலியை எனக்குத் தந்துவிடுவதுண்டு.

  3. Jaishankar Soleti சொல்கிறார்:

    SAKTHI VANNATTHU POOCHI INGU IRUKKA, MATRA VANNATTHU POOCHIGALAI OPPIDUVATHU EAN…, JOTHI VADIVAAI ENDRUM OLI VEESATTUM…….Jai…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s