நினைவு

உறக்கத்தில்
ஆழ்ந்திருக்கிற  மனத்தில்
நீ
ஒரு மீனென  நீந்தி
என்னைக் கலைக்கிறாய்

 .

உன் நினைவு வாதையாக மாறி
நிரம்புகையில்
களைத்த  எனதுடல்
நித்திரையில்  முழ்கி
கனவுகளைத்  தூண்டுகிறது

 .

கனவில்
வடிவங்களற்று
என்  மீது படர்கிறாய்

 .

உன்னை
உணர்ந்தபடி
ஏதேதோ  சொல்கிறேன்
ரகசியமாய்  எவரும்  அறியாவண்ணம்

 .

பறவைகள்
நமக்கான
பாடலை  இசைக்கத்  தொடங்குகின்றன

 .

உனதுடனான எனது  இருப்பை
விழுங்கியபடி
மெல்லத்  துயில்  கலைகிறது

 .

உன்
நினைவை
என்மீது  போர்த்தியபடி.

 .

…………………………………………………………………………………………….சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , . Bookmark the permalink.

One Response to நினைவு

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    நினைவை, பறவையாக மாற்றி, தமிழ் வார்த்தைகளை போர்த்தியபடி உறங்கும் ஒவ்வொரு மனிதனின் அன்பு தென்றல்..இந்த கவிதை..துயில் எழுந்தாலும் ,கலையாத அன்பு சொற்கள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s