திசை மானி

.
.
எத்தனை  வகையில் தான்
வெளிப்படுத்துவாய்
உனதன்பை

 .

என் கவிதைகளில்
ஒளிரும்
உன் வார்த்தைகள்
என்னை ஒளியூட்டிக்  கொண்டிருக்கின்றன

 .

அது
உனது
அன்பைப்  போலவே
இருக்கின்றது

 .

எனக்குள்
இருக்கும் உன்னை
இந்த  கவிதைகளைத்  தவிர
யார் அறிவார்

.

எத்தனை திசைகள்
இருப்பினும்
இந்த காந்தம்
உன்னை நோக்கியே
இருப்பது

 .

இழுக்கென  நினைத்தாலும்

 .

உனது
புன்னகை  போதும்
நான்
மலரவும்

 .

உன்னை
மகிழ்விக்கவும் .

 .

…………………………………………………………………………...சக்தி ஜோதி.…………………..
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to திசை மானி

 1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  வார்த்தைகள் , வாசகனை ஒளியூட்டிக் கொண்டிருக்கின்றன..கவிதையின் சொற்கள் ,காந்தம் மட்டுமல்ல ..அன்பின் கலங்கரை விளக்கம் ..இந்த கவிதை, கார்த்திகை தீப ஒளி..அன்பாய் ஒளிரட்டும் ..

 2. ravi (swiss) சொல்கிறார்:

  //எனக்குள்
  இருக்கும் உன்னை
  இந்த கவிதைகளைத் தவிர
  யார் அறிவார்//
  எழுதியெழுதி கிழித்தெறிந்த குப்பைக்கூடைக்குள் துளாவவைக்கும் வரிகள் இவை. நிஜமோ நிழலோ கணநேரமாவது வாழவைத்து சருகுகளாய்ப் போன இவைகளை கண்டெடுப்பதும் இனிமையானதுதான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s