காற்றில் கிளை அசைகிறது

 
மலைப் பாதையில்  ஒரு வளைவில்
தனியாக நின்றிருக்கிறேன்
 
என்னிடம்  வர  சற்றுத்  தாமதமாகியது
மாலைக்காற்று
வழக்கமாக  கடந்து  செல்லும்
மஞ்சள்  விளக்கிட்ட   வாகனங்கள்  வரவில்லை
காட்டெருமைகள்  வரக்கூடுமென 
வேகமெடுக்கும்  பள்ளி மாணவர்கள்  வரவில்லை
 
எப்போதாவது
மான்கள்  கடந்து  செல்லும் பாதையில்
தனியாக  நின்றிருக்கிறேன்
 
என்னுடன்  உறவாடும்  மாலைக் காற்றை
பரிசளிப்பவனும்
இன்னும் வரவில்லை
 
அன்பை
காற்றின்  குரலாக
மாற்றி  அழைத்து  வருபவன்
 
நேற்றைய  காற்றைப்  பருகி
இன்று  ஜீவித்திருக்கிறேன்
காத்திருக்கிறேன்
 
செல்ல நாய்க்  குட்டியென
அவன்  வருவது
தொலைவில்  தெரிய
 
காற்றில்  கிளை  அசைகிறது
 
……………………………………………………………………………….சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to காற்றில் கிளை அசைகிறது

  1. winkaja சொல்கிறார்:

    செல்ல நாய்க் குட்டியென
    அவன் வருவது
    தொலைவில் தெரிய
    காற்றில் கிளை அசைகிறது

    கூடவே காதலும் வருகிறது…..

    அருமை வாழ்த்துக்கள்

  2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    காற்றில் கிளை அசைகிறது..அசைவது கிளைகள் மட்டுமல்ல ..தமிழுந்தான் ..காற்றைப் பருகி..அன்பு காற்றை பருகி ,செல்ல நாய்க் குட்டியென,வார்த்தைகள் வந்து விழுகின்றது….poem, அன்பும் தமிழும் கலந்த தென்றல்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s