அன்பிலான சொல்

உனக்கான
சொல்லைத்  தேர்ந்தெடுத்து விட்டேன்
.
தீர்ந்து   போகவே  முடியாதது  அச்சொல்
 .
பகலும்
இரவும்
இரவின்  இடைவெளிகளிலும்
நிரம்பித் ததும்பும்
உன்  நினைவுகளினால்
உயிர்  பெறுகிறது
அந்தச் சொல்
 .
பேசிப்பேசி
பேச மொழியற்ற  தருணங்களில்
என் உலகிலிருந்து
ஒரு பூவைப்  பறிப்பது  போல
அந்த சொல்லை
எடுத்து வைத்துள்ளேன்
உன்முன்
பூவின்  வாசமென
உருமாறி  நிரம்புகிறது  நம்மிடையே
அச் சொல்லை
நீ  கேட்பாயெனில்
ஆதியிலே
அச்சொல்லிருந்தது
 .
அந்தசொல்
நானாக
உயிர்பெற்றிருக்கிறேன்  என
உணர்வாய்
 .
அன்று
அது
நம்மை அழைத்துச்  செல்லும்
அன்பினால்
பூக்கள் பூக்கும் தேசத்திற்கு .
……………………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும் and tagged . Bookmark the permalink.

2 Responses to அன்பிலான சொல்

 1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  பூக்கள் பூக்கும் தேசத்திற்கு –மனதில் மகிழ்வு ஏற்படுத்தும் தருணம் ..ஆதியிலே
  அச்சொல்லிருந்தது..அம்மாவும் அன்பும் ..POEM, அன்பு பூக்கள்

 2. Velu Pillai சொல்கிறார்:

  பூக்கள் பூக்கும்,தேசத்திற்க்குச் செல்லும்,வழி ?,,,எப்போது,,என்கிற கேள்விக்குறிகளுடந்தான்,,,,,,,காத்திருக்கிறோம் !,,,
  நீங்களும்,நாங்களும்,,,,ஏன் ?,,எல்லோரும்தான்,,,,,,,,,,,,, !
  சக்தி ! நீங்கள்,,,,,,,,,,,,,,ஜோதியாக !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s