பணிப் போர்வைகள்

பணிப் போர்வைகள்
உன்னைப்  போர்த்திக்  கொண்டிருக்கின்றன
என்ற உன்  நிலையறிந்தும்
என்னைக்  கடக்கும்
வெயில் நிழலும்
சிதறிய  நீரில்  கலைந்த  ஓவியமும்
சிதைந்த  சுவரின்  மாய  உருவங்களும்
உன்னை
உருவாக்கிக்  கொண்டிருக்கின்றன
ஆயிரம்  மாயக்கரங்  கொண்டணைக்கும்
வெளிச்சம்
என்னை
ஒளிச்சிற்பமாக்குகிறது
பனிக்குளிர்   இருளோ
நான்  கடக்கும்  பருவங்களென
வெறுமையில்
விழ்த்துகிறது
எப்போதாவது
உன்னைப் பார்த்து  விடுவேனென்ற
நம்பிக்கையில்
எஞ்சிய  காலத்தைக்
கழித்து  விட  முடியுமாவெனத்
தெரியவில்லை
பாளம் பாளமாய்  வெடித்திருக்கும்
நிலத்தில்
பெய்யும்  பெருமழையென
வருவாயென
உனக்காகக் காத்திருக்கும்
என்னையறியாமல்
உன்  சொற்களில்
என்னைத் தேடுகிறேன்
எப்போதும் .
 ………………………………………………………………………….சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பணிப் போர்வைகள்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    நிழலும், கலைந்த ஓவியமும் , மாய உருவங்களும்–illusions of life..when v hope for the best, definitely பெய்யும், பெருமழை….poem, power of karagam..

  2. chinnappayal சொல்கிறார்:

    என்னையறியாமல்
    உன் சொற்களில்
    என்னைத் தேடுகிறேன்
    எப்போதும் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s