மழைக்கால கோலம்

ஒரு அதிகாலைப்பொழுதில்
பெண்கள் கோலமிட்டுக்   கொண்டிருக்கிறார்கள்
அது
அடர்மழைபொழியும் காலமாகவும்  இருந்தது
முன்பொரு அதிகாலை
அவள்
அப்போதுதான்  கோலமிட்டு  திரும்பியிருக்க
மழைபொழிந்து  கலைத்துக்   கொண்டிருந்தது
இருள்  விலகியிராத  அந்தப்  பொழுதில்
வேலையாய்ச்   சென்றவன்
இன்னமும்
திரும்பியிருக்கவில்லை
வரைந்த  கோலங்களைக்  கலைப்பதும்
கலைந்து  கிடக்கும்  புள்ளிகளை  இணைப்பதுமான
விளையாட்டில்
அவனுடனிருந்த அதிகாலை
ரகசியங்கள்
அவள் மனத்திலிருந்து  வெளியேறி
வண்ணப்பொடியில்  சேகரமாகிறது
பெரும்மழை   கலைத்திடாத
வண்ணங்களை
சுமந்து  கொண்டிருக்கிறது  கோலம்.
………………………………………………………………………………..சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to மழைக்கால கோலம்

 1. மழைக் காதலன் சொல்கிறார்:

  தனித்து விடப்பட்ட மனதொன்றும்
  சுமந்து கொண்டே தான் திரிகிறது
  அவளின் அதிகாலை கோலங்களை…

 2. Aevenkatraman Raman சொல்கிறார்:

  arpudhamana kavithai. migavum sandosappatten. malaikkalam kanmun therindathu. kolam manadhai vittu agalavillai.

 3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  மார்கழி பொழுது ,விடிய ஆரம்பிக்கும் தருணம்..ஆண்டாள், கண்ணனை நோக்கி தவம் , அன்பால்..வாழ்க்கையில், அற்புத கோலங்கள்,அன்பால் மட்டுமே வரையப்டுன்கின்றது ..poet has much timing sense..poem, அன்பின் வெளிப்பாடு….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s