பிடித்ததும் பிடிக்காததும்

 
பிடித்தது  எது என்றால்
சொல்லத் தெரியாது
பிடிக்காதது எது என்றாலும் ௬ட
 
நான் பிறந்ததும்௬ட
பிடிக்கவில்லை சிலருக்கு
என் தாயோ  பாலூட்டினாள்
செல்லமேயெனக்    கொஞ்சினாள்
 
கொழுகொழுவென்றிருந்த
எனக்கு
பார்த்ததையும்  கேட்டதையும்
இணைத்து
வாக்கியங்கள்  அமைக்கத்  தெரிந்திருந்தது
 
மதிப்பெண்கள்  ௬ட
பரிட்சைத்தாளில் உச்சத்தை  அடைந்தன
கவனிக்கப்பட்டேன்
பிடிக்காதவர்களுக்கும்௬ட  பிடித்தபடி
 
பெண்
என்றார்கள்
ஆணைப்போல பெண்   என்றார்கள்
ஆணையும்  விஞ்சும்  பெண்  என்றார்கள்
 
எனக்குப் புரியவுமில்லை
பிடிக்கவுமில்லை
 எனக்குப்  பிடித்தது  அல்லது பிடிக்காதது
பொருட்டல்ல  இங்கு
 
நான்
நானாக  இல்லாதபோது
புகழ்கிறார்கள்  பாராட்டுகிறார்கள்
 நானாகவேயிருந்தபோதோ
மூச்சுக்காற்றை  நிறுத்திக் கொல்லத் துணிகிறார்கள்
 
பிடித்தது பிடிக்காதது 
எல்லாம்  கட்டப்பட்டிருந்தது 
சொற்களினால் 
 
சொற்கள் 
சொற்களாக இல்லாத தருணத்தில் 
பிடித்ததையோ  பிடிக்காததையோ 
எவ்வாறு  பதிவு  செய்ய  முடியும் 
 
பெண் என்பதால்
சிலருக்குப் பிடித்திருக்கிறது
சிலருக்குப் பிடிக்கவில்லை
அழகைப்  பற்றியும்௬ட   கவலைப்பாடாமல்
 
ஆண்களால்  ஆன  உலகத்தில்
பெண்களைத்  தெய்வமாக்குகிறார்கள்
தாய் என்கிறார்கள்
எந்தப்  புகழுரையும்  உயர்வுநவிற்சியும் வேண்டாம்
 
பெண் உயர்வல்ல  ஆணும் உயர்வல்ல
மேலும்
ஆணின்றி  பெண்ணும்
பெண்ணின்றி  ஆணும்  வாழ இயலுமோ
 
பிடிக்காதவை  பிடித்ததை
ஆராய  வேண்டியதேயில்லை
 
எனக்குப் பிடித்தது  அவனுக்குப் பிடிக்காது
அவனுக்குப்  பிடித்தது  எனக்குப்  பிடிக்காது
நாங்கள்
பதினாறு மக்களைப்  பெற்றிருக்கின்றோம்
 
இப்படித்தான்
இவ்வுலகம்  சுழன்று  கொண்டிருக்கிறது
பிடித்ததைப் பற்றிக்கொண்டு
பிடிக்காதபடி .
 ……………………………………………….சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to பிடித்ததும் பிடிக்காததும்

 1. B.AMBALAVANAN சொல்கிறார்:

  THIS IS ONE OF YOUR BEST POEMS.THANK YOU FOR POSTING THIS POEM IN THE BLOG.

 2. ravithangadurai சொல்கிறார்:

  எனக்குப் பிடித்திருக்கிறது..

 3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  the Chinese policy of “yin and yang”,s for how polar opposites or seemingly contrary forces are interconnected and interdependent in the natural world, and how they give rise to each other in turn..so life is like that..so, இப்படித்தான் இவ்வுலகம் சுழன்று கொண்டிருக்கிறது with interconnected of opposite powers.. poem, yin & yang..

 4. Senthil Kumar சொல்கிறார்:

  முடிவை நோக்கி
  புகழுக்கு மயங்கினான் மனிதன் ‍மகுடிக்கு
  மயங்கும் பாம்பு போல

 5. ravithangadruai சொல்கிறார்:

  எனக்குப் பிடித்ததும்.. பிடிக்காததும்..!
  பிடித்தது.. கவிதையில் இருந்த உண்மை..!
  பிடிக்காதது.. கவிதைக்கு மெருகேற்றும் உங்கள் புகைப்படம் இல்லாதது..!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s