சிவப்பிலான உடை

 
 
 
மிகச்சரியான  பருவத்தில்  கிடைத்த
இருக்கைக்கென  இவ்வுடையை  தேர்வு  செய்திருந்தாள் 
சிவப்பிலான  உடை
இனி  அவள்  அடையாளமாகப்போகிறது
 
அவளது  தொடுதலில்
பறவையென  உருமாறிப் பறக்கப்போகிறது
மேலும்  சில  உயிர்கள்
 
அவர்கள்
முட்டையில்  சிகப்புச்  சாயமிட்டு  பரிசளிக்கும்
கனவைக்  காணத்  தொடங்கவுள்ளனர்
 
வரவேற்பறை  கம்பளத்தை  கண்ட
தளர்ந்த  நடைகளும்
தோல்வியில்   துவண்ட  பாதங்களும்
இருக்கையில்  முன்னிருந்த  குரலின்  பரிச்சயமறிந்தவர்
பிறருக்காக ஒலிக்கவுள்ள  குரலிலிருந்து  வெளியேறும் சொற்களில்
சிகப்பு  வண்ண  ஆடையுடன்
செங்கோல்  ஏந்திய
சிகப்பு  தேவதையின்  சாயலைக்  காணத் தொடங்குவார்கள்.
 
.
…………………………………………………………………………………………சக்தி ஜோதி
 
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to சிவப்பிலான உடை

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    பிறருக்காக ஒலிக்கவுள்ள குரலிலிருந்து வெளியேறும் சொற்களில் sets tune with Marxian philosophy..by the same time,in mythological, red s for power ,moreover shakthi s also power in mythology..here,.. red+shakthi=high mass of energy release towards the welfare of masses..anyhow,the poet becomes a ray of hope to the people belonging to தளர்ந்த நடைகளும் தோல்வியில் துவண்ட பாதங்களும்.. poem, speaks for others welfare..

  2. Senthil Kumar சொல்கிறார்:

    இதோ மீண்டும் ஜெனித்துவிட்டாள் எங்கள் ஜான்சி!!!
    ஹர ஹர மஹா தேவா!!!
    இந்த முறை சமுதாயத்துடன் போர் துவங்க போகிறாள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s