இரண்டு நிலா தெரியும் இரவுகள்

 
இன்றைய  இரவின் நிலவு
அத்தனை  குளிர்வாய்  இருக்கிறது
 
இரவு கொண்டாடுகிறது
தன்னிலை  மறந்தவர்களையும்
பைத்தியக்காரர்களையும்
சாகசக்காரர்களையும்
 
மேலும்
காமத்தைப் போர்த்தியவர்கள்
மகிழ்கிறார்கள்
 
வலப்பக்கத்திலிருந்து  எழுந்த நிலவு
கவிதைக்கு
காட்சிகளை  வெளிச்சமிடுகிறது
 
அரும்புகிற  கவிதை வரிகளை
மலரச்செய்கிறது
எழுதப்படாத  சொற்களை
நிலவின் முன் வைத்துக் காத்திருக்கிறேன்
 
 நிலவு  தன்  ஒளிவரிகளால்
என் மீது
எழுதத்  தொடங்குகிறது
பின்னிரவில்
வெப்பம்  தணிந்த  உடலின்
கண்களில்
இரண்டு  நிலவு  மிதந்துகொண்டிருக்கிறது .
 
………………………………………………………………………………………….சக்தி ஜோதி

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

One Response to இரண்டு நிலா தெரியும் இரவுகள்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    coolness & pleasant of moon have no equals..more over, two moons, poet link family & poem with two moons..when both shines of coolness, the merry will be more, s reflected very vibrantly in this poem….poem,coolness..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s