கூச்சம்

அனைத்துத்  தயாரிப்புகளும்
அந்த  நாளை  நோக்கியே
அமைந்து விடுகின்றன
முன்னிரவில்
தொற்றிக்கொண்ட  பதற்றத்துடன்
புலர்கிறது அன்றையதினம்
நினைவுகளால்  நிரம்பித்  தளும்பும்
மனத்தை  அடக்கவியலாது
திணருகிறேன்
மரங்களையும்
நிலத்தையும்
பின்னகர்த்தி  விரையும்  வாகனம்
மனஒட்டத்திடம்
தோற்றபடியேச்  செல்கிறது
பயணமுடிவில்
பிரிவைத்  தாங்கிக்கொண்ட
துயரத்திற்குப்  பிராயச்சித்தமாய்
அவனை  முத்தமிடுகிறேன்
இறுக்கி அணைத்துக்கொள்கிறேன்
பால்  சுரக்காத
மார்பின்  தவிப்பை  உணரவியலாமல்
முலைப்பால் அருந்தி வளர்ந்தவன்
என்னை  விலக்கி  நகர்கின்றான்
ஒரு பெண்ணைத் தீண்டிய கூச்சத்தொடு.
…………………………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

One Response to கூச்சம்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    the inference s a person who was brought by woman’s love & affection (mother’s), now feels shy about the woman who loves & feels him very much.. powerful words..based on the previous day incidents & it’s feelings ,புலர்கிறது அன்றையதினம்..great thought on today..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s