பெண்மை 2

 
வானத்தின்   நிறமும்  தன்  ஆடையின்  நிறமும்  ஒன்றென
ஓடித்திரிகிற  அச்சிறுமியின்
பள்ளி  நாட்கள்
பூவைப் போல மலர்ந்து
பூவைப் போல
பூத்தபடியிருக்கிறது
 
அவளுடன் நீலப்பூக்களை பூக்கச் செய்திடும்
சிநேகிதிகள்  நூற்றுக்கணக்கில்  சுற்றித் திரிகின்றனர்
நீலக்குடை   விரிந்து
நீலப்  பூச்சூடி
நீலஉடை     அணிந்து
 
அவர்களது  உலகம்
ஆகாயத்தை  விடப்பெரிதென
மைதானத்தில்  விரிந்து  கிடக்கிறது
நீலவெளியாக
செம்மண்  மைதானத்தை நீலநிறமாக்கி
வானத்தை இழுக்கும்  நூறுசிறுமிகள்
தொட்டு  விடும்  நீல  ஆகாயத்தைக்  கண்டு  ஓடியாடுகின்றனர்
 
பேதைப்பருவம்  தொடும்  வயதினர்
வெட்கமுடன்  விளையாட்டை  விட்டு  வெளியேறுகின்றனர்
 
செவ்வான மாலைவேளையில்
அவர்களது  நீலவானமும்
நீலப்பூக்களும்  பொருந்தாத  நீலநிற  உடையும்
இரவுவேளையில்  கனவு  காணத்தொடங்குகிறது.

…………………………………………………………………………………….சக்தி ஜோதி

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to பெண்மை 2

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    செவ்வான மாலைவேளையில் அவர்களது நீலவானமும்–very first, one color was described but ,during பேதைப்பருவம் தொடும் வயதினர்–their play & dreams ? this s my inference from this poem..poem to think on change of girls towards பேதைப்பருவம் …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s