சிறை மீட்டல்

 

 
மண்கலயங்களின் சிறிய துவாரங்களின் வழி
தங்கள் உலகை
மெல்ல மெல்ல எட்டிப்  பார்த்தன  சில பறவைகள்
 
மஞ்சள் 
பச்சை
நீலம்
இன்னும் பல வண்ணங்களில்
கூண்டினுள் பறவைகள்
காப்பிச்செடியின்
காய்ந்த  கிளைகளில்
காதலை  பரிமாறிக்கொண்டிருந்தன
 
வெயிலும்
பனியும்
கம்பிகளைக்  கடந்து  உள்நுழைகிறது
 
கூண்டுக்  கம்பிகள்
மண்கலயங்கள்
காப்பிக் கிளைகள்
பறவைகளை
பருந்துகளிடமிருந்து  பாதுகாக்கின்றன
 
பறவைகளின் இருப்பினை
வாசனையால்  உணர்ந்துகொள்ளும் பூனைகள்
எங்கிருந்த  போதிலும்
அவைகளை   அச்சப்படுத்திக்கொண்டேயிருந்தன
 
உயிரின்  வாதையை  படபடக்கும் சிறகுகள்
அறிவதில்லை
ஒருபோதும்  கூண்டுப் பறவையை
பூனையால் பிடித்துவிட இயலாதென்பதை .
 
………………………………………………………………………………………சக்தி ஜோதி
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to சிறை மீட்டல்

  1. afsankr சொல்கிறார்:

    கூண்டினுள்ளில்அடைந்திருக்கையில் அச்சம் மடம் நாணம பயிர்ப்பு அணியணியாக அதனதன் சரியான அளவில் அவற்றுடன் அந்தப் பறவை வடிவிலான அனைத்து உயிரினங்களுக்குள்ளும் நிறைந்த சிந்தனை…

  2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    direct meaning–birds r secured..the inference s like this..women r in cage while many luring things r ready to make their prey ..but, the culture,beliefs help women to identify the bad things.. finally, the vulture of bad things never get succeed over women..great..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s