பெண்மை 1

 
பிறந்த  குழந்தை  பேசிச்சிரிக்கிறது தானாக
விளக்கென  மினுங்கும்   கண்களில்
யாவரையும்  பார்த்துச் சிரிக்கிறாள்
கள்ளிப்பாலுக்குத் தப்பிய
பெண் ஜென்மமெனக் கலங்கும்  பிரசவித்த  தாய்
பால்  புகட்டுகிறாள்  வேதனை  ௬டி
 
நஞ்சிட்டுக்  கொன்றிட  யோசித்தவள்
பனிபொழியும்  அதிகாலையில் 
ஊதாநிறத்தில்
முளைவிட்டு  வெண்நரம்புகளோடிய பயிர்களால் 
மீண்டெழுகிறாள்
 
அப்பயிர்களில் 
மாபெரும்  காலம்  படிந்திருக்கிறதைக்  காண்கிறாள் 
 
அவனது  வயலில் 
நடவுப்பாடல்  கடும்வெயிலைப்  போல அலைகிறது 
 
தன்  புதிய 
உலகம் 
கண்களின்  வழி  தெரிவதை 
கண்டு  கொண்ட  குதூகலத்தில்  
ஊதாநிறப்பூச்சியை கையசைத்து  விரட்டுகிறது
அக்குழந்தை .
*…………………………………………………………………………………………..சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to பெண்மை 1

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    exactly, ur poem coincides with born of 700th billion baby, that too baby girl in Philippines..great warm welcome to that baby girl with ur meaningful words of ‘கண்களின் வழி தெரிவதை கண்டு கொண்ட குதூகலத்தில் ‘..congrats…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s