வண்ணங்களின் பிறப்பிடம்


 
அவளின்  விரல்களில்  அமர்ந்திருந்தது
வண்ணத்துப்பூச்சி
பறந்து  செல்வதற்கு  மனமற்று
அவளையே   வனமென்று  கொண்டது
 
விரல்களை
கிளையென்னும் 
உதடுகளை  மலரென்றும்
அமர்ந்தமர்ந்து  உணர்ந்தது  வண்ணத்துப்பூச்சி 
 
தன்னில்  பதிந்த  வண்ணங்களை
அகற்ற  விரும்பாது
அவள் சேகரிக்கிறாள்  தன்  மேனியெங்கும்
பல வண்ணங்களை 
 
பிறகு
அவளே   வண்ணத்துப் பூச்சியென  பறக்கிறாள்
அவளது  ஆகாயத்தில்
அவளது தோட்டத்தில்
 
அவளது  உதடுகள்  மலர்கின்றன
அவளது  கைகள்  விரிகின்றன
 
நிலத்திலிருந்து  எழுந்த  தருணம்
அவளிடமிருந்து   பறக்கிறது
ஓராயிரம்
வண்ணத்துப்பூச்சிகள்.
…………………………………………………………….சக்தி ஜோதி
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

4 Responses to வண்ணங்களின் பிறப்பிடம்

 1. கோவை கவி சொல்கிறார்:

  ”,…தன்னில் பதிந்த வண்ணங்களை
  அகற்ற விரும்பாது
  அவள் சேகரிக்கிறாள் தன் மேனியெங்கும்
  பல வண்ணங்களை…”
  கொஞ்சம் வித்தியாசக் கற்பனை..நல்லது….வாழ்த்துகள்.

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  the poet confirms that everybody s butter fly if they realize the potential planted in them..beautiful poem.

 3. shiju சொல்கிறார்:

  nice thinking welldone

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s