நீரலை விலகும் பொழுது

 
பாதங்களை வருடிச் செல்கிறது
மருதா நதி
கூடவே சில மீன்கள்
 
மேய்ச்சல் முடிந்து திரும்பும் மாடுகள்
 நீர் அருந்திச் செல்கின்ற
அந்த மாலையில்
 
தண்ணீரை அள்ளிப் பருகும்
அவனது கைகள்
அவள் கரம் பற்ற
எதன் பொருட்டோ நழுவிவிட்டது
 
பின்பொரு மாலையில்
மருதாநதியின் கரையோரம்
இரவு கண்ட கனவை நினைத்தபடி
அமர்ந்திருக்க
 
கனவை
எப்படி கைக்கொள்ளப் போகிறாள்
என
மாடுகளும்
ஆடுகளும் அசைபோட்டபடி
அவளைக் கடக்கின்றன
 
நதியின் நீரலைகளில்
அந்தக் கனவு
அவனை நோக்கி நகர்கிறது . ……………………………………………………………………………………..சக்தி ஜோதி………………….
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to நீரலை விலகும் பொழுது

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    மாடுகளும் ஆடுகளும் அசைபோட்டபடி–thoughts of animals.
    கனவை நினைத்தபடி அமர்ந்திருக்க–thoughts of woman on man–so, feelings r common to all ‘jeevarasigal’–nicely woven in simple thoughts. every snap aligns with ur every poem to it’s meaning which evinces more interest on creativity.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s