காதலின் வாதை

 

மழை
சாரலாய்  புல்வெளியில்
சொரிகிறது
 
வயல்வெளிகள்
பூத்துக் குலுங்குகிறது
காதலின் குதூகலம்
 
நீண்ட மலைத்தொடரின்
வழியாக
நெளிந்து  செல்லும்  கனவுகள்
 
பெரும் மழையை
நனைக்கின்றன
 
மழையும்
புல்வெளியும்
மலைகளும்
மலர்களும்
இன்னும்
தென்றலும்
 
எதனால்  நிறைகிறது
என்பது
காதல்  அறியும்
 
உன்  நினைவால்
உருவாகும்
வாதையை
அறியாமல்
 
காதலைப் போற்றுகிறது
கவிதைகள்.
……………………………………………………………………………………….சக்தி ஜோதி………….
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to காதலின் வாதை

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    வாதையை அறியாமல் காதலைப் போற்றுகிறது—in love, pain may be. .finally when the love realizes into knowledge, it leads to success..

  2. ravi சொல்கிறார்:

    உங்கள் கவிதைகளும் சரி..
    உங்கள் படங்களும் சரி..
    மனதைக் கொள்ளைக் கொள்ளுகின்றன, சக்திஜோதி..

  3. ravi (swiss) சொல்கிறார்:

    // நீண்ட மலைத்தொடரின்
    வழியாக
    நெளிந்து செல்லும் கனவுகள்
    பெரும் மழையை
    நனைக்கின்றன//
    முரண்கள் அல்லது நேர்மாறான பிரதியீடுகள் கற்பனைக்குள் ஏற்படுத்தும் வளம் தனி. வரிகள் விரிந்து குளிர்மை தருகிறது சக்தி ஜோதி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s