சிறகிலசையும் காதல்

 

 
 
பூங்கொத்துகளை
ஏந்தி  வருகிறாய்
இருகரங்களில்
விரல்கள்  நடுங்கிக் கொண்டிருக்கின்றன
 
வெண்மலர்கள்  சூடிய  மங்கை
பின் தொடர
மெல்ல  நடக்கின்றாய்
 
தேவாலய  மணியோசை
நினைவடுக்குகளில்  அந்தரங்களை
எழுப்பிக்  கொண்டிருக்கிறது
 
நீ
ஏற்றிவைத்த  விளக்கின்  சுடர்
அணைந்துவிடாதிருக்கும் படியான
எனது  மன்றாட்டுக்களை
கடந்து  செல்கிறாய்
 
உன்
அருகாமையிலிருக்கும்
பெண்ணின்  விருப்பத்தை
நீ  அறிய  ஆவல் கொண்டிருப்பது  போல
விருப்பம்  என்ற  சொல்லை
நீ
சொல்வதற்குத்  தயங்கியவனாயிருப்பதை
ஆவலுடன்  பார்க்கிறேன்
யாரோ
புறாக்களை  ௬டுதிறந்து  பறக்க விடுகின்றனர்
 
மணியோசையையும்
நீ
முதன்முதலாய்  தந்த  பூங்கொத்தின்
நறுமணத்தையும்
சிறகுகளின்  அசைப்பில்
நகர்த்திச்  செல்கின்றன
கோபுரப்  பறவைகள் .
 
………………………………………………………………………………………………………..சக்தி ஜோதி
 
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to சிறகிலசையும் காதல்

  1. அருள் சொல்கிறார்:

    தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

    http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

  2. அ.உமர் பாரூக் சொல்கிறார்:

    நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

  3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    நறுமணத்தையும் சிறகுகளின் அசைப்பில் நகர்த்திச் செல்கின்றன கோபுரப் பறவைகள் —the freedom and courage that pigeons have is not with the man..nice narration.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s