முடிந்த கதைகள்

 
 
யார்  வீட்டிலோ
எதன் ஊடோ ஒளிந்து கிடக்கும்
நினைவுகளை சுமந்தபடி
 
இல்லம் வரும்
அழைப்பிதழ்களில் எண்ணற்ற கதைகள் படிந்துள்ளன
ஒரு  அழைப்பிதழோடு வருபவர்கள்
தயங்கியபடி  வாசலில் நுழைகிறார்கள்
அவர்களிடம் இருந்து கைமாறும் அழைப்பிதழ்
மீட்டெடுக்கிறது
உறைந்துபோன நினைவுகள்
 
அழைப்பிதழில்
படிந்திருக்கும் மஞ்சள் துகள்களில்
ஒளிர்கின்றன
 
அந்த நாட்களில்
இரவுகளில்
கண்விழிந்து மஞ்சளிட்ட
அம்மாவை
அவள் விரல்களில் கசிந்த
அன்பு படிந்திருந்த அழைப்பிதழை
பத்திரப்படுத்தத் தவறிவிட்டேன்
 
அதை
ஒவ்வொரு அழைபிதழிலும்
தேடியபடி இருக்கின்றேன்
 
அந்தக் காலம்
மஞ்சளாய் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது
………………………………………………………………….சக்தி ஜோதி
 
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

6 Responses to முடிந்த கதைகள்

 1. இல்லம் வரும்

  அழைப்பிதழ்களில் எண்ணற்ற கதைகள் படிந்துள்ளன

  உண்மைதான்.!

  (அன்பு படிந்திருந்த அழைப்பிதழை

  பத்திரப்படுத்தத் தவறிவிட்டேன்)

  நல்ல வரிகள்!

 2. Manoharan krishnan சொல்கிறார்:

  really very nice poem written by you

 3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  great tribute on ‘amma’–turmeric thoughts still greenly in mind..never subsides ..it will carry our life with much happiness.. when mother sees her daughter is tied with ‘mangala nan (thirumangalyam)’ on marriage day,,the drops of joy from mother’ eyes —equals the moment of mother seeing her child after delivery..after long time, a nice poem..

 4. Srikanthsiva Siva சொல்கிறார்:

  அவள் விரல்களில் கசிந்த
  அன்பு படிந்திருந்த அழைப்பிதழை
  பத்திரப்படுத்தத் தவறிவிட்டேன்….

  மஞ்சள் தடவிய அழைப்பிதழை பத்திரப்படுத்த தவறிவிட்டாலும்… அவளது நினைவுகளை கஸ்துரி மஞ்சள் போல என்றும் நெஞ்சில் சுமந்துகொண்டு தான் நடை பிணமாக வாழ்கிறேன்,,,!!

 5. Srikanthsiva Siva சொல்கிறார்:

  முடிந்த கதைகள்….
  முடியாமல் தொடரும் நினைவுகள்…
  கலையாத கனவுகள் …
  கண்ணீர் சிந்தும் நினைவுகள்…

 6. Namachivayam Thillai Arul சொல்கிறார்:

  என்னுள்ளே நான் சிறகடித்து பறக்க
  உங்கள் புது கவிதை ரீங்கரமாய்….
  தொடரட்டும் உங்கள் ரீங்காரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s