தனித்தலையும் பறவை

 
 
அந்தரங்கத்தின்  தனிமை
புகுந்துகொண்டது
அவனைச் சந்தித்த பொழுதுகளில்
 
எவ்விதமாயும்
வெளிப்படுத்த இயலாக்  காதலோடு
நதியிடம் வேண்டினாள்
தலைவனிடம்
தன்  சொற்களைக்  கொண்டு சேர்ப்பிக்கும்படி
கடந்து  சென்றது நதி
 
காற்றிடம்  கேட்டாள்
தன்  காதலைக்  கொண்டு  சேர்ப்பிக்கும்படி
விலகிச்  சென்றது காற்று
 
பறவைகள்
வெகு தொலைவில்
உயரப்  பறந்து  கொண்டிருந்தன
 
நதியின்  கூழாங்கற்களாய்
காலம்
உருண்டோடிக்  கொண்டிருக்கிறது
 
வடிவமற்ற சொற்களில்
காதல்  சிதறிக்  கிடக்கிறது
வனத்தில்
தனித்தலையும்  பறவையைப் போல
……………………………………………………………………………. சக்தி ஜோதி
 
எஸ் ஐ சுல்தான்

.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , . Bookmark the permalink.

3 Responses to தனித்தலையும் பறவை

 1. Srikanthsiva Siva சொல்கிறார்:

  வடிவமற்ற சொற்களில்
  காதல் சிதறிக் கிடக்கிறது
  வனத்தில்
  தனித்தலையும் பறவையைப் போல…

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  காதல் தனித்தலையும் பறவையைப் போல–a sorrow song on love..almost like a soul longing in universe .but , one day it will land in matching person,@ that time , soul will definitely land in joy..till such time ,soul will be in solo..simple nice poem in limited words..

 3. Ponnambala Thiagarajan சொல்கிறார்:

  poems on Love is mostly tragedy type only. Self pity and exaggeration are the main expression in love poems. Even a good poet will waste his/ her time in writing love poems. In my opinion, even nice poems are meaningless in relation to love.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s