முதிர்கால வண்ணங்கள்

 
மயங்கிச்  சரியும் அந்திவானத்தின்
வண்ணங்களில் 
என் நினைவுகள் கரைந்திருந்தன 
 
வெகு   உயரத்தில்  பறந்துகொண்டிருக்கும்
விமானத்தின்  தோற்றமென
உன் நினைவு
 
இரவு  வானத்தின்  ரகசியங்களாய்
மனதின் நினைவுகள்
 
என்னை விரும்பியபடி
இன்னொரு  பெண்ணோடு  வாழ்ந்துகொண்டிருக்கும்
உன்னிடம்
என்னை  நினைவூட்டுவது 
உன் மகளின் பெயர்
 
அவரவர்  கைகளுக்கு  அகப்பட்ட
வாழ்வின்  வண்ணங்களையெடுத்து
பூசிக் கொண்டிருக்கிறோம்
 
காலம்  கழிகிறது
பலப்பல வண்ணங்கள்
 நம்மீது  தீட்டியபடி
 
வாழ்க்கையின்  வண்ணங்கள்
மெதுவாக
நிறமிழக்கத்  துவங்கிவிட்டன
 
 நினைவுகள்
நிறமற்ற  ஒன்றாய்  மாறுகிறது
 
ப்ரியங்களின் 
அடர்த்தியான வண்ணங்களை
எதனாலும்  மாற்றமுடியாமல்
தவிக்கிறது
இந்தப் பிறவி
 
கடந்து  கொண்டிருக்கிறோம் .
 
……………………………………………………………………………………சக்தி ஜோதி…………….
 
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

5 Responses to முதிர்கால வண்ணங்கள்

 1. Ambalavanan Balasubramaniam சொல்கிறார்:

  VAAZHKKAIYIN PADUGALAIK KURUTHA UNGAL KAVITHAI MIHAVUM NANDRAGA VANTHIRUKKINRATHU.INTHA VAAZHKKAI NAMAKKUP PIDITHALUM,PIDIKKAVITTALUM,UYIRULLAVARAI VAAZHTHU THEERA VENDIYIRUKKIRATHU.IDHAIVITTU VERU POKKIDAM ILLAI.

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  it reflected about loneliness & the glittering of erst while joy whither away in due course . end of life rests with older thoughts. nice poem. but, in silapathigaram kannagi s w/o children. but, madhavai has manimeglai. even @ that earlier time, illango’s thought is different. started to read ur poem individually but ended with of silapathigaram….

 3. Srikanthsiva Siva சொல்கிறார்:

  முதிர்கால வண்ணங்கள்

  என்னை விரும்பியபடி
  இன்னொரு பெண்ணோடு வாழ்ந்துகொண்டிருக்கும்
  உன்னிடம் …..
  Madom oru chinna request vunga kavithaila valkaiyin ella ragasiyangalaiyum velippadaiya sollatheergal sila per athai thangikkolla maattargal

 4. ravi (swiss) சொல்கிறார்:

  அந்திவானத்திற்கு வண்ணக் கலவைகளுடன் ஓவியனாய் அனுப்பும் வலு கவிதையின் ஆரம்ப வரிகளிலேயே கிடைத்துவிடுகிறது. ஓவியத்தனமான கற்பனையில் திளைத்திருந்து நான் தொடர்ந்தபோது, “நினைவுகள் நிறமற்றுப் போகிறது பார்” என்று அலைக்கழித்து விடுகிறது கவிதை, ஒரு பெண்மனச் சேதி சொல்லியாய்.
  //அவரவர் கைகளுக்கு அகப்பட்ட
  வாழ்வின் வண்ணங்களையெடுத்து
  பூசிக் கொண்டிருக்கிறோம்//
  இந்த வரிகள் யதார்த்தமானது.

 5. afsankr சொல்கிறார்:

  மிகச் சாதரணமாக ஆரம்பிக்கும் கவிதையின் நடை பதின மூன்றாம் வரியில் தன் நிஜ முகம் காட்டும்போது அதன் விஞ்சி நிற்கும் வீரியத்தால் கத்தி கொண்டு அறுப்பது போல கை கூடாமல் போன காதலுடன் கை சேதப் படுகிறது மனசு….ஒரு தேர்ந்தெடுத்த கவிதை தெளிவான நடையுடன்… மனசு தான் கலங்கிவிடுகிறது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s