முத்தங்களின் இரகசியங்கள்

(பிரபஞ்சன்)….
இனி சக்தி ஜோதியின் நிலம் புகும் சொற்கள் எனும் கவிதைகளாலான இத்தொகுதியைப்  பரிசீலிப்போம்
  இக் கவிதைகள் முழுக்க  அகம்  சார்ந்த கவிதைகள் .ஒரு மேம்போக்கான  அர்த்தத்தில்  இவைகள்  காதல்  கவிதைகள் எனும்  பொருள் பெறக்கூடும்  .எனினும் அத்தளத்தினும் ஆழமானவை  இக்கவிதைகள்  .பெண் -ஆண் உறவில்  உளவாகும் அகம்  மற்றும்  சார்ந்த  நுணுக்கங்கள்  கூடிய  கூற்றுகளால்  வடிவமைக்கப்பட்டவை  இவை. அந்த வகையில் ,தொகுதியில்  முதல்  நாலைந்து  கவிதைகளைப்  படிக்கப் தொடங்கியதுமே . சக்தி ஜோதியின்   ஜனன   பூமி  சங்கப் பிரதேசம் என்பது புரிபடும் .இதன் பொருள் ,ஈராயிரம்  ஆண்டுகளுக்கு   முந்தைய  சங்க முத்திரைகளை  21  ஆம் நூற்றாண்டுக்குக்  கொண்டுவருகிறார்  என்பதல்ல .மாறாக   இந்த நூற்றாண்டு ,இந்தக்கணத்து , இந்த வாழ்வியலை ,இந்த நிகழ்காலத்தைச்  சங்கத்துக்குக்  கொண்டு  போகிறார் என்பதே பொருந்தும் .இதன் மூலம் அவர் இக்காலக் கவியாகிறார்  என்பதோடு ,தாம் சங்க  மரபினர்  என்பதையும்  நிறுவுகிறார் ..,…(பிரபஞ்சன்).
என்னை முத்தமிடுகையில்
உனது பிரச்சினை
என்னவென்பது
எப்பொழுதும் புரியவில்லை
உனக்கான
முத்தத்தில்
புதைந்திருக்கும்  பிரியங்களின்
இரகசியங்கள்
நீ அறிந்து கொள்ள
முயல்வதேயில்லை
என் இதழ்கள்
உன்னைத் தீண்டுகையில்
என் தந்தை
என் சகோதரன்
என் நண்பன்  ஆகியோரின்
அன்பையும்
உன்னிடமே  சேர்க்கிறேன்
இதழ்களால்
என் மீது  செலுத்தும்
உனதன்பு
வெறும்  முயங்குதலில்
முடிந்து   போகின்றபொழுது
எஞ்சுகின்ற   தனிமையில்
புரிந்து  கொள்வதற்கு
என்னிடம்
எதுவும்  இல்லை  எப்பொழுதும் .
………………………………………………………....சக்தி ஜோதி
…………………………………………………………………………………………
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to முத்தங்களின் இரகசியங்கள்

 1. Selvakumar சொல்கிறார்:

  Hi,
  I wish all success in your journey of writing .

  Selvakumar

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  the inference from this poem i derive is when women feels man as a collection of all affection she has in her life but man does not so and hence her world becomes island . this poem makes us to realize the importance of women since their love is full of confidence where as man does not..highly philosophical poem..

 3. Srikanthsiva Siva சொல்கிறார்:

  முத்தங்களின் இரகசியங்கள்………

  \முத்தத்தில் புதைந்திருக்கும்
  பிரியங்களின் இரகசியங்கள்
  அறிந்து கொள்ள…………
  எஞ்சுகின்ற தனிமையில்
  புரிந்து கொள்வதற்கு
  என்னிடம் எதுவும் எதுவும் இல்லை என்னிடம் ….!!
  Muthathin Ragasiyangalai Kandupidikka nan kavignanum Illai . Scientistm Illai..
  But.., Jothi vungal kavithaigal atharku valigattiyai Irukkum…Yenbathil santhegam illai..

 4. s.raajakumaran சொல்கிறார்:

  ஒரு முத்தத்தில் விரியும் யுக நீளங்களுக்கு அளவுகள் இல்லை.முத்தத்தைப் பற்றிய புதிய பதிவு.பிரபஞனின் விமர்சனம் துல்லியமானது.வாழ்த்துக்கள் ஜோதி.

 5. Bar-Code (@kaeswar) சொல்கிறார்:

  //
  என் இதழ்கள்
  உன்னைத் தீண்டுகையில்
  என் தந்தை
  என் சகோதரன்
  என் நண்பன் ஆகியோரின்
  அன்பையும்
  உன்னிடமே சேர்க்கிறேன்
  //
  //வெறும் முயங்குதலில்//

  ஆழகாக ஆழமான வார்த்தைகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s