துணை

 இந்த நிலம் ,நீர் ,ஆகாயம் ,காற்று , நெருப்பு  ஆகிய அனைத்தும் பெண்ணின்  வடிவங்கள்தாம் .இவைகளில்  எது இருக்கிறதோ  அது என் கவிதைகளில் இருக்கிறது .
 காமம் இன்றிக்  காதல் எவ்வாறு   இல்லையோ   அவ்வாறு குடும்பம்  உறவுகள் இன்றிச்  சமூகம் இல்லை . இந்த வரம்பிற்குள் இருந்து தான் வெள்ளிவீதியாரும் ,ஆண்டாளும்,பாடினார்கள் ,அவர்களைப் பின்பற்றிச் செல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை .
மொட்டு பூவாய்  மலர்கிறது ,காய்க்கிறது ,கனிகிறது, இந்த நிகழ்வு எதனையும் நாம் கண்ணால்  காணமுடியாது.அதனைப்  போன்றது  தான் காதல்  மலரும் தருணமும் ,அந்த மென்மையான தருணத்தைத்தான்  நான்  பதிவு  செய்திருக்கிறேன் ………….சக்தி ஜோதி
 
.
 
 
இந்த
இரவு
உறங்க  மறுத்து
உன் நினைவுகளால்
என்னை  நிரப்புகிறது
 
என்னை விட்டு  அகலாத
இரவின்  நிழல்
மணித்துளிகளின்  கசிவில்
நனைகிறது
 
அந்த வனத்தில்
நீ அருகில்  இருக்கும்  போது
உண்டாகும்  தவிப்பு
பல மடங்கு
பெருகிக்
கொந்தளிக்கும்
 
என் தனிமையின்
இரவில்
கனலும்
உடல்  தணிய
உன் நினைவைத்  தவிர
துணை
ஏது எனக்கு .
.
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

4 Responses to துணை

  1. தமிழ்த்தோட்டம் சொல்கிறார்:

    அருமை பாராட்டுக்கள் உங்களின் படைப்புகளை நமது தமிழ்த்தோட்டத்திலும் பூக்கவிடலாமே

  2. Srikanthsiva Siva சொல்கிறார்:

    என் தனிமையின்
    இரவில்
    கனலும்
    உடல் தணிய
    உன் நினைவைத் தவிர
    துணை
    ஏது எனக்கு .
    The expressed lines should recollects each and every one’s past experience..

  3. mcafareed சொல்கிறார்:

    சக்தி ஜோதியின் கவிதைகள் படிக்காவிட்டால் ஏதோ இழந்தமாதிரி நாட்கள் அமாவாசையாகி விடுகின்றது,

  4. எஸ்.ராஜகுமாரன் சொல்கிறார்:

    காதலின் இயல்பான வெளிப்பாடு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s