ஒரு கவிஞை நினைவில் அமர்கிறாள்

ரவி (சுவிஸ்)
கவிதை மொழி நன்கு கைவரப்பெற்றிருக்கிறது உங்களுக்கு சக்திஜோதி. புராண இதிகாச கதைகளின் ஒற்றைப் பரிமாணக் கூறுகளை உவமைகளாக புதுக் கவிதைக்குள் புகுத்தும் வழமை கவிதையை மாறுபட்ட வாசிப்புக்குள் சுழலவிடாமல் தடுப்பனவாகவே நான் பார்ப்பதுண்டு. இதற்குள் அகப்படாத உங்கள் கவிதைகள் இயற்கையை வாசிக்கின்றன. இயற்கை பன்முகப் பரிமாண வாசிப்புக்கு அள்ள அள்ளக் குறையாத சுரபி. உங்களுக்கு அது வசப்பட்டிருக்கிறது. எமது உடல்களைக் கொண்டாடவும், எமது இயல்பான உடல்சார்ந்த உணர்ச்சிகளை காட்டாறாக வெளிக்கொணரவும், மென்மையான மனித உணர்வுகளை வருடல்களாக படரவிடவும் மொழியாள்கையும் இயற்கையும் உங்களிடம் உறவுகொண்டாயிற்று. அற்புதமாக பல வரிகள் வெளிப்பட்டிருக்கின்றன. ஆண் பெண் உணர்வுகளையோ உணர்ச்சிகளையோ ஒளித்துவிளையாடும் பேச்சுக்கு இடமற்றதாக்கும் உங்கள் துணிபு கவிதைக்குள் வந்து வாள்வீசுகிறது.

காதல் பற்றிய தமிழ்ச் சினிமாய மேக்கப்பினுள் சலித்துப்போன வரிகளை திரைப்படங்கள் காட்சிகளும் இசையும் கொண்டு தாங்கிப்பிடிக்கின்றன. கவித்துவம் என்று உள்நுழைந்து பார்த்தால் சலிப்புத்தான் மேலிடுகிறது. மௌனவாசிப்புக்குள் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாத கவித்துவம்தான் எஞ்சுகிறது.

இது எல்லாவற்றையும் தூரவீசி இயற்கையுடன் படையெடுத்து வருகிறது உங்கள் சொல் ஆளுமை. இயற்கை குறியீடுகளாக உங்கள் கவிதைகளில் வெளிப்பட்டாலும், சொல்லுக்குச் சொல் குறியீடுகளைப் பொருத்திப் பார்த்து வாசிக்கும் கள்ளத்தனம் உங்கள் கவிதைக்குள் புகுந்துகொள்ள உதவாது. காற்று மழை மின்னல் வெளிச்சம்… என அதன் தங்குதடையற்ற இயக்கத்துடன் கவிதையின் வரிகளினூடு நாம் பயணித்தால் உங்களது கவித்துவத்தைத் தரிசிக்க முடியும். தொடருங்கள் சக்திஜோதி.

என்னை மிகப் பாதித்த இந்த வரிகளுடன் ஒரு கவிஞை நினைவில் அமர்கிறாள்.

”பெருமழையோடு அவன்
வந்துசென்ற தடயங்கள் எதுவும்
வீட்டில் இல்லை, மனசில்
படிந்திருக்கும் அவனது
துளிஈரம் தவிர.”

ஒரு நல்ல கவிஞை அறிமுகமாகிய மகிழ்வுடன்

ரவி (சுவிஸ்). 26092011.

நன்றி.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கட்டுரை, மதிப்புரை and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to ஒரு கவிஞை நினைவில் அமர்கிறாள்

  1. Kaa Na kalyaanasundaram. சொல்கிறார்:

    மிக நல்ல பகிர்வு. நல்ல கவிதை வரிகளுடன். வாழ்த்துக்கள்

  2. Siva சொல்கிறார்:

    காதல் பற்றிய தமிழ்ச் சினிமாய மேக்கப்பினுள் சலித்துப்போன வரிகளை திரைப்படங்கள் காட்சிகளும் இசையும் கொண்டு தாங்கிப்பிடிக்கின்றன. கவித்துவம் என்று உள்நுழைந்து பார்த்தால் சலிப்புத்தான் மேலிடுகிறது. மௌனவாசிப்புக்குள் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாத கவித்துவம்தான் எஞ்சுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s