கடத்தல்

 

சக்தி ஜோதி

 

ஒரு போதும்
உணர்ந்த அன்பை
சொற்களில் வெளிப்படுத்த முடிந்ததில்லை
 
ஒரு மரம்
முறிந்து விழும்
ஓசையைப்  போன்றது
அல்லது
கழுத்து அறுபடும்
ஆட்டின் குரலைப்  போன்றது
 
எத்தனை முயன்றும்
உடலில் பெருகும்
வெளிச்சத்தை
விளக்க இயன்றதேயில்லை
 
ஓர் இலக்கை
நோக்கிச்  செல்லும்போது
அது
நம்மை  நோக்கி வருவதுபோல்
இந்த அன்பு
நெருங்குகின்றது
 
பட்ட  காயங்களும்
ஏற்பட்ட புண்களும்
ஒரு பார்வையில்
மேலும்
அன்பினை  ஏற்படுத்துகின்றன
 
வார்த்தைகளில் நம்பிக்கையற்றுக்
கண்களில்  சரணடைகிறேன்
 
ஒரு துளி
கண்ணீர்  வழியாக
கடந்து  செல்கிறது
அன்பு .
………………………………………………………………………………………………………………..
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

4 Responses to கடத்தல்

  1. s.raajakumaran சொல்கிறார்:

    அன்பின் வேர்களையும் கிளைகளையும் பூமிக்குக் கீழும்-வானை நோக்கியுமாக வெளிப்படுத்தும் கவிதை.இந்த கவிதையுடன் விடிகிறது என் இன்றைய இனிய காலை.நன்றி தோழி.

  2. அப்துல்லாஹ் சொல்கிறார்:

    சகோதரியின் வலைப்பூவுக்கு இன்று தான் வாசம் செய்தேன்… வசப்படுத்துகிறது… கவிதைகள் என்ற பெயரில் ஸ்படிக சுத்தமாக மனவியல் படிமங்கள்… சுழிவற்ற ஆற்று நீரின் ஓட்டம போல தன் பாட்டையில் தங்கிடாமல் செல்கிறது. நன்றி பகிரப்பட்ட தங்களின் மனோட்டங்களுக்கு….

  3. shenisi சொல்கிறார்:

    ////வார்த்தைகளில் நம்பிக்கையற்றுக்
    கண்களில் சரணடைகிறேன்//

    என்ன வரிகள்!!!

    மனதை அசைக்கின்றன! வாழ்த்துக்கள்!

  4. natarajan vedhachalam சொல்கிறார்:

    arumai thozhi

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s