கனவும் புனைவும் கலந்து நெய்த மாண்டேஜ் கவிதைகள்

– அன்பாதவன்
நூல் மதிப்புரை
கடலோடு இசைத்தல்
கவிதைகள்
சக்திஜோதி
உயிரெழுத்து வெளியீடு
“நமது மொழி எளிமையானது;இனியது ;உயர்ந்தது ;தனித்து இயங்கும் திறன்
உள்ளது ;செம்மையானது ;
நம்முடைய கவிதை இரண்டாயிரம் ஆண்டு நீண்ட நெடிய மரபு உடையது .செழுமையான
அனுபவங்களும் உணர்வுகளுமாக நிரம்பியது .உலகக்கவிதைத் தரத்துக்கு ஒப்பானது .எளிமையானது;உண்மையானது ;
நவீன கவிதைக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பவை சங்கக்கவிதைகள் தாம் எனப்பெருமிதம் பொங்க கொண்டாடும் கவிதைச் சித்தன் விக்ரமாதித்யனின் கொண்டாட்ட வரிகளுக்கு சற்றும் குறைவில்லா சாரமுடன் எழுதப்பட்டவை சக்திஜோதியின் கவிதைகள். தனது முதல் தொகுப்பான ‘நிலம் புகும் சொற்கள் ‘கவிதைத்தொகுப்பு மூலமாக தனது வாசகத் தளத்தை விரிவடையச் செய்து வெற்றியும் கண்டிருக்கிறார்
சக்திஜோதியின் கவிதை உலகம் அகஉணர்வு சார்ந்தது.காதலையும் காமத்தையும் சரியான புரிதலோடு கொண்டாடுவது.
“மழையை
தன் உடல் திறந்து பருகத் தொடங்குகிற
நிலத்தை
பூச்செடியினை நடும்போது
உணர்கிறாள் ஒரு பெண்
மெல்ல வலுக்கிறது சாரல்
தன்மேல் படரும் ஆண்வாசமென்று
வெட்கத்துடன் மலர்கிறது நிலம்
நிலமெங்கும் பாய்ந்தோடுகிறது மழைநீர்.”
இங்கு நிலம் ,மழை என்பனவற்றின் குறியீடுகள் எவை என எளிய வாசகனுக்கும்
உணர்ந்து கொள்ளும் மொழி நடையிலேயே அமைந்துள்ளது சக்திஜோதியின் கவிதைமொழி .
“காதல் என்பது சமூகம் சார்ந்தது இல்லை என்று எப்படி பிரித்தறிந்து கொள்வது என எனக்குப் புரியவில்லை நான் சந்திக்கும் பலபெண்களின் வாழ்வாதார பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடிகிற எனக்கு அவர்களது அக உணர்வுகளையும் புரிந்துகொள்ளமுடிகிறது .
இக்கவிதைகள் பெரும்பாலும் உணர்வுபூர்வமான மெல்லிசையின் அகசப்தமாக கருதுகிறேன்”,
எனத் தன் கவிதைகளின் கர்ப்பமூலத்தைப் பதிவு செய்யும் சக்திஜோதியின்கவிதைகளின் அதிநவீ னக் குறியீடுகளோ வாசகனைப் பயமுறுத்தம் படிமங்களோ காணப்படுவதில்லை . மாறாக நிலம்,மழை,கடல் என இயற்கை சார்ந்த எளிய அதே நேரம் அர்த்தங்கள் பல பொதிந்த வலிய சங்கதிகளே குறியீடுகளாகவும்,படிமங்களாகவும் அமைந்து கவிதைகளில் வண்ணச் சுழற்சியாக ஒளிர்கின்றன .
“நிலத்தின் வாசல் திறக்கிறது
கடல் புகுகிறது
கடலின் வாசல் திறக்கிறது
நிலம் நிறைகிறது’
அலை பாடிக்கொண்டிருக்கிறது
கடலின் பாடல்களை”
இங்கு ‘அலை’ என்ற குறியீடு நிலத்துக்கும் கடலுக்குமான தொடர்பு சாதனமாக
இயங்குகிறது.நிலமும் கடலும் -பெண்ணும் ஆணுமெனில் ,அலை- எது ?நினைவு?
உறவு?உணர்வு? வாசிபவனுக்குள்ளும் அர்த்த அலைகள் பொங்கும் வண்ணம்
படைக்கப்படுவவையே சிறந்த கவிதை என்பதை நிரூபணம் செய்கின்றன சக்திஜோதியின் கவிதைகள்.
‘கிளி புராணம் ‘ என்கிற கவிதை காலங்காலமாய் தங்ககூண்டுகளுக்குள் தத்தளிக்கிற
பெண்கள் குறித்து விவாதிக்கிறது.
‘வீட்டின் அறைகளில்
சமையறையில் பூஜையறையில்
குளியலறையில்
வாழ்நாளைக் கடத்தி விடும் கிளி
சொல்வதைச் சொல்கிறது
தருவது உண்கிறது
பல ஆயிரம் ஆண்டுகளாய்
கூட்டினை அடையாத கிளிகள்
பறந்து செல்கின்றன அகன்ற வானில் “
தம் பயணம் அறியாக் கிளிகளின் சோகங்களை அர்த்தமான வரிகளில் பதிவு செய்யப்பதிந்த
கவிதை.
பெரும்பான்மையான பெண் கவிஞர்களின் தொகுப்புகள் உறவுச்சிக்கலை
குறிப்பாக கணவன்-மனைவி புரிதலின்மையை,ஈடுசெய்ய வியலாத எதிர்பார்ப்புகளை எழுதி வருகையில் சக்திஜோதி உறவுகளின் மேன்மை குறித்தே ,உறவுகளால் நெய்யப்பட்ட உறவின் இறுக்கம் குறித்தே சுகிக்கின்றன சக்திஜோதியின் கவிதைகள் பலவும் .
“ஒரு போதும் உணர்ந்த அன்பை
சொற்களின் வெளிப்படுத்த
முடிந்ததில்லை
ஒருமரம் முறிந்த விழும்
ஒசையைப் போன்றது அல்லது
கழுத்து அறுபடும்
ஆட்டின் குரலைப் போன்றது.
வார்த்தைகளில் நமபிக்கையற்றுக்
கண்களில் சரணமடைகிறேன்
ஒரு துளி கண்ணீர் வழியாக
கடந்து செல்கிறது அன்பு”
எழுதப்பட்ட சொற்களின் பலத்தையும்,எழுதப்படாத மவுனத்தின் வலிமையையும் சரியான
விகிதத்தில் கலந்து செய்யப்பட்ட கவிதைகளில் உணர்வுகள் ததும்பும்தாய்மையின் குரலாக ,சமகாலத்தின் திடமாகப் பிரச்சனைகளில் ஒன்றான தலைமுறை இடைவெளி குறித்தான கவிதையொன்று தொகுப்பின் கிரீடமாக ஒளிர்கிறது.
“அனைத்து தயாரிப்புகளும்
அந்த நாளை நோக்கியே
அமைந்து விடுகின்றன .
பயண முடிவில் முடிவை தாங்கிகொண்ட
துயரத்திற்குப் பிராயச்சித்தமாய்
அவனை முத்தமிடுகிறேன்
இறுக்கி அணைத்துக்கொள்கிறேன்
. பால் சுரக்காத
மார்பின் தவிப்பை உணரவியலாமல்
முலைப்பால் அருந்தி வளர்ந்தவன்
என்னை விலக்கி நகர்கின்றான்
ஒரு பெண்ணைத் தீண்டியக்
கூச்சத்தொடு”
மிக நுண்ணிய உணர்வியல் கூறுகள் கொண்ட அற்புதமான கவிதை இதுவென வாசிப்பவனை உணரவைக்கும் நுட்பவரிகள் இவை .தாய்க்கும் மகனுக்குமான அன்பின் உளவியல் கூறு
இத்தனை நுட்பமான சொல்லமுடிந்திருக்கிறது சக்திஜோதியால் .
“ஒன்றுகொன்று தொடர்பற்ற இரண்டு காட்சிகளைத் தேர்தெடுத்து
ஒட்டி வெட்டி அவ்விரண்டிற்குள் ஒரு தொடர்பை உண்டாக்கி விடுவதுதான்
மாண்டேஜ் .இதன் மூலம் கவிதைக்குள் அனுபவத்தின் மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட
சுரங்கப்பாதை இருபுறங்கலும் திறந்து விடப்பட்ட சுரங்கப்பாதை ஓன்று
அமைக்கப்பட்டு விடுகிறது ” என்பார் கவிஞரும்
கலை விமர்சருமான இந்திரன் .
சக்திஜோதியின் பல கவிதைகள் இயற்கையின் வெளிகளாலும்
நுட்ப அனுபவங்களின் சாரங்களாலும் நிரப்பப்பட்டு வாசகனுக்கு பிரமிப்பையும்
புதியதோர் கவிதை அனுபவத்தையும் தருபவை.
‘பெண்மை பற்றி சில கவிதைகள் ‘ என்ற நீள் கவிதை பெண்ணின் வளர் பருவங்களை
வண்ணங்களோடு இணைத்து ஓர் புதிய பரிமாணங்காட்டுகிறது.
“சக்திஜோதிக்கு கவிதைஎனும் சொல்
தேர்ந்தெடுக்கப்பட்டாகிவிட்டது என்று என்னால் துணிந்து கூற இயலும் “என அணிந்துரைக்கும்
தேர்ந்த படைப்பாளி நாஞ்சில் நாடனின் வார்த்தைகளில் உண்மை பொங்குவதை
இந்தக் கவிதைகளைச் சுவைக்கும் வாசகன் உணர்வான்!
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், மதிப்புரை and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s