தொலைந்த அண்மை

சக்தி ஜோதி
.
இவ்விரவு வேளை
கண்களோடு மனதையும்
கூசவைக்கும்படி
நகரத்து விளக்குகள் ஒளிர்ந்தன
.
வந்து மறையும் வாகனங்களின் ஓசை
மற்றும்
இடையிடையேயான
நடமாட்டங்களின் வழி கதடைகிறது  மனிதக் குரல்
,
இரவுத் துயிலைப் பறிகொடுத்தவன்
சதாப் பொழுதும்
தன் நினைவுகளிலிருக்கும்
இரவினைக் காணவேண்டித் துயருறுகிறான்
.
அவனது இரவில்
கால்மாற்றி நிற்கும் எருதுக் கூட்டத்தின் ஓசை
சாளரத்தின் வழி வருகிறது
.
தன் சகியை
அண்மையில் பூத்த இரவுப் பூவென
முகரும் பொழுதினை
பத்திரப் படுத்த  இயலாததில் வேதனையால் கலங்குகிறான்
அவனது இரவும்
அவனுடைய அண்மையும் தொலைந்து விட்டன
.
புற்கட்டுகளும்
பால் கவுச்சியும் கொண்ட
இல்லத்தின் பின் வாசலில்
முழுநிலவு
.
இப்போதும்
தன் சகியின் வேதனையைக் கண்டபடி நகர்வதை
நகரத்து நிலா பார்த்துக் கொண்டிருக்கிறது.

……. …….. … …….. …… …….. …….. ….. ……. …… ….. ….. …. …. ……. …….. ……. …… … …… ……….

எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to தொலைந்த அண்மை

  1. kanagaraj சொல்கிறார்:

    sakthi jothi,ungal kavithai miga arumai,nalla karuthukalai kondulathu,vazharka ungal kavithai sevai, vazhthum ungal nanban gurusamy kanagaraj.

  2. sabari சொல்கிறார்:

    migavum arumaiyaga irukkirathu ungalathu padaipu thozhie. vaalthukkal

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s