அனிச்ச மலர்

கவிதை எந்தப் புள்ளியிலிருந்தும் எங்கு வேண்டுமானாலும் தோன்றமுடியும். ஆக உயிரை -உணர்வை -உடலைக்-கொண்டிருக்கக் கூடிய வாழ்க்கைத்தளத்தில் தான் பிணமாவதைத் தவிர்த்துக் கொள்ள பரிமாணம் அடைந்து கொண்டிருக்கின்றன சக்திஜோதியின் கவிதைகள் .ஏனெனில் கவிதை என்பது மனிதரால் உருவாக்கப்படுவது. கவிதை என்பது மனித மொழி ,மனவலி இவைகளை எதார்த்தமாக விதைத்திருக்கிறார்………..(பூ.மு.அன்புசிவா)
 
                                                                                                                         சக்தி ஜோதி
 
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

4 Responses to அனிச்ச மலர்

 1. sara சொல்கிறார்:

  தமிழை படித்து சுவைக்க விருப்பம் , அதுவே இந்த திருப்பம்

 2. கவிஞர் இரவா-கபிலன் சொல்கிறார்:

  தொட்டு வைத்த துளியிலும் சுவை தேன்!
  கட்டுக் குலையா கன்னித் தமிழை
  வட்டில் தன்னில் வாகாய் வழங்கி
  விட்டீர்! நன்றே! வாழ்த்து கின்றேன்!

 3. sisulthan சொல்கிறார்:

  பேஸ்புக் எண்ணங்கள்
  Isac Jcp : விளக்கம் இன்னும் தெரியவில்லை – அனிச்சமலர் 🙂
  Logan Thangarajah : எனக்கும் அதே நிலை
  Isac Jcp : சக்தி ஜோதி பதில் கூற மாட்டீர்களோ?
  Isac Jcp: இதை போஸ்ட் செய்யும் நபர் தயவு செய்து, சக்தி அக்கா உங்களை பேஸ்புக்கில் தேடுகின்றனர், என்னால் பேசமுடியவில்லை, நீங்களே வந்து அடுத்தமுறை போஸ்ட் செய்யுங்கன்னு சொல்வீர்களா?
  Arockia Joseph Rajan : அனிச்ச மலரை முகர்ந்தால் அது உடனே வாடிவிடும் அப்படித்தானே …
  Isac Jcp: யாருக்குத்தெரியும். என்னைக்கவர்ந்த தலைப்பு. பதில் சரியாக தெரியவில்லை
  கவிஞர் இரவா- கபிலன் : அனிச்சமலரை யாராவது பார்த்திருக்கிறீர்களா?
  Arockia Joseph Rajan: சார் இது உண்மை, குறளில் இருக்கு …
  கவிஞர் இரவா- கபிலன் :குறளில் இருப்பது எனக்கும் தெரியும்! அனிச்ச மலரைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டேன்!!
  Chandra Mohan : மிக்க நன்றி சக்தி ஜோதி அவர்களே. வார்த்தை ஜாலம் தானே உங்கள் பிளஸ் பாயிட்- நடுநிலை தவறாத நல்வாழ்த்துக்கள்
  Sakthi Jothi: சங்க இலக்கியத்தில் கபிலரின் குறிஞ்சிப் பாட்டிலும், கலித்தொகையிலும், திருக்குறளில் நான்கு இடங்களிலும் அனிச்சமலர் குறிப்பிடப் பட்டுள்ளது. பாடல் வரிகள் மூலம் அந்த மலர் மோப்பக் குழையும் இயல்புடையது என்று மட்டுமே தெரிகிறது , அது செடியா மரமா கொடியா என்று வரையறுக்கப் படவில்லை.என்றாலும் இந்நாளில் pride of India ‘ என்கிற மலர் அனிச்சம் எனக் குறிக்கப் பட்டுள்ளது. இந்த மலர் Lalbagh- bangalore, paredeniya botanical garden -sri lanka, kuala lumpur botanical garden -malaysia வில் காணப்படுகிறது . நன்றி:DR . கு. ஸ்ரீநிவாசன் ,தொல் அறிவியல் துறை , சங்ககாலத் தாவரங்கள் , தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக veliyeedu.
  கவிஞர் இரவா- கபிலன் : அது செடியா மரமா கொடியா என்று வரையறுக்கப் படவில்லை.என்றாலும், எங்கள் ஆய்வில் அது ஒரு மரம் என்று அறியப்பட்டுள்ளது! ஆனால், இனம் காணமுடியவில்லை! காரணம் அதன் பண்பு மோப்பக்குழையும் என்று கூறியிருபது தான்!
  Sakthi Jothi : அனிச்ச மலர் பற்றிய இன்னும் ஒரு தகவல், அரிநீர், அவிழ் நீலம், அல்லி, அனிச்சம் என கலித்தொகையில் வகைப்படுத்தப் படுவதாலும் , அனிச்சமும் அன்னத்தின் தூவியும் ‘ எனச் சொல்லப்படுவதாலும் இது நீர்த் தாவரமாகவும் இருக்கலாம் என தமிழரும் தாவரமும் என்ற புத்தகத்தில் Dr . k . v . கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுகிறார். பாரதிதாசன் பல்கலைக் கழக veliyeedu.
  கவிஞர் இரவா- கபிலன் சக்தி! அந்நூலை நானும் படித்திருக்கின்றேன்! அனிச்சம் மருத்துவத்தைச் சார்ந்த மூலிகை இனமாகக் காண்கிறோம்! அதன் வழியே ஆராயும் போது, அனிச்சம் மர வகையெனனும் தகவல் கிடைக்கிறது. உ-ம்:- சாம்பசிவம் பிள்ளை தமிழ்மருத்துவக் கலைக்களஞ்சியம்!
  .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s